மலச்சிக்கலால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்று பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் நோய்களில் ஒன்று தான் மலச்சிக்கல்.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது ஆகும்.

அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை செய்தாலே போதும்.

செய்முறை

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களை மட்டும் வெளியே நீட்டி, மற்ற விரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்.

இம்முத்திரையை தினமும் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் உணவு உட்கொள்வதற்கு அரை மணிநேரம் முன்பாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இம்முத்திரையை செய்வதால் நம் குடலின் செரிமான திறன் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

மேலும் உடலில் நீர் வறட்சி ஏற்படாது. வயிறு, குடல் சிறுநீரகங்கள் நன்கு செயல்படும். கண்களின் வறட்சி நீங்கி கண்பார்வை தெளிவு ஏற்படும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்