வயிற்றுக் கொழுப்பை எளிதில் கரைக்கணுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்று பலரும் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க பொரும்பாடுபட்டு வருகின்றது.

இதற்காக நம்மில் சிலர் நேரத்தை செலவழித்து ஜீம் சென்று கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவார்.

இதனை தவிர்த்து நாம் வீட்டிலிருந்தே செய்யகூடிய சில எளிய உடற்பயிற்சிகளும் உள்ளன. அதில் தற்போது சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)

இந்த உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, சிக்ஸ் பேக் வைக்கவும் முடியும்.

அதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கால்களை தூக்கி 90 டிகிரி மடக்கி, கைகளை கழுத்திற்கு பின்னால் வைத்துக் கொண்டு, முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.

இதேப்போன்று 12-16 முறை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெர்டிகிள் லெக் க்ரஞ்ச் (Vertical leg crunch)

இந்த உடற்பயிற்சியை செய்ய, தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மேலே தூக்கி, கைகளை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு, தலையை முன்னோக்கி தூக்க வேண்டும்.

இந்த உடற்பயிற்சியின் போது முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த உடற்பயிற்சியையும் 12-16 முறை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி பந்து க்ரஞ்ச் (Exercise ball crunch)

இந்த உடற்பயிற்சியின் போது, உடலின் அனைத்து தசைகளும் செயல்படும். மேலும் மிகவும் கவனமாக இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

அதற்கு உடற்பயிற்சி பந்தின் மேல் படுத்துக் கொண்டும், தரையில் கால்களை நன்கு ஊன்றி, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முன்னும், பின்னும் எழ வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்