அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெற வேண்டுமா?

Report Print Kavitha in உடற்பயிற்சி

ஓர் வயது வரும் போது நம்முடைய தசைகளை தசைகளை தோங்க ஆரம்பித்துவிடுகின்றது.

இதற்காக நம்மில் ஜிம்மிற்கு சென்று மணித்தியாலகணக்கில் நேரம் செலவழித்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவதுண்டு.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபடவும் நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்சனைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

எடையைத் தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகளை இறுக்கமடைய செய்யும் திறன் கொண்டவை.

இதனை ஜிம்மிற்கு சென்று தான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்து கூட இந்த பயிற்சியை மேற்கொள்ள முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

Overhead Press Squat Jack
செய்முறை

A. காலை சிறிது அகட்டி இடுப்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை இரு கைகளிலும் பிடித்து, முழங்கைகளை மடக்கி மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு நிற்கவும்.

B. பின் ஒரு ஜம்ப் செய்து கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி, படத்தில் காட்டியுள்ளவாறு, உட்காரும் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

வெயிட் பிளேட்டை தலைக்கு மேல் தூக்கியவாறு வைக்கவும். அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும். இதேபோல 5 முதல் 8 முறை செய்யலாம்.

பலன்கள்

முழு உடலின் தசைகளுக்கு வலிமை அதிகரிக்கும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் உள்ள அதிகப் படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தொடை, இடுப்புகளில் உள்ள செல்லுலைட் எனப்படும் கொழுப்பு கட்டிகளை கரைக்க உதவுகிறது.

இடுப்பு, எலும்புகள், தசைகள், மற்றும் நரம்புகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது. தோள்பட்டை, கைகள் வலுவடைகின்றன.

கைகளில் தொங்கும் கொழுப்பு தசைகள் குறைகிறது. அழகிய உடல் வடிவமைப்பு பெற உதவுகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்