வயிற்றுக் கொழுப்பை எளிதில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சி

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்று உள்ள பல ஆண்கள் ஜிம்மிற்கு செல்வதற்கு முக்கிய காரணம் நடிகர் சூர்யாவைப் போல் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசையில் தான்.

இதற்காக பலரும் கடின உடற்பயிற்சிகள் மட்டும் டயட் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் எந்த ஒரு கருவிகளின் உதவியும் இல்லாமல் ஈஸியான உடற்பயிற்சியின் மூலமே வயிற்றுள் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க முடியும்.

இங்கு சிக்ஸ் பேக் வைக்க தடையாக வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எப்படி என்பதை பார்ப்போம்.

ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)

இந்த உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, சிக்ஸ் பேக் வைக்கவும் முடியும்.

அதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கால்களை தூக்கி 90 டிகிரி மடக்கி, கைகளை கழுத்திற்கு பின்னால் வைத்துக் கொண்டு, முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும்.

பின் பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இதேப்போன்று 12-16 முறை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெர்டிகிள் லெக் க்ரஞ்ச் (Vertical leg crunch)

இந்த உடற்பயிற்சி செய்வதும் ஈஸியே. இதற்கு எந்த ஒரு கருவியும் அவசியம் இல்லை. அந்த உடற்பயிற்சியின் மூலமும் வயிற்றுக் கொழுப்புக்களை கரைக்கலாம்.

இந்த உடற்பயிற்சியை செய்ய, தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மேலே தூக்கி, கைகளை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு, தலையை முன்னோக்கி தூக்க வேண்டும்.

இந்த உடற்பயிற்சியின் போது முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த உடற்பயிற்சியையும் 12-16 முறை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி பந்து க்ரஞ்ச் (Exercise ball crunch)

இந்த உடற்பயிற்சியின் போது, உடலின் அனைத்து தசைகளும் செயல்படும். மேலும் மிகவும் கவனமாக இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

அதற்கு உடற்பயிற்சி பந்தின் மேல் படுத்துக் கொண்டும், தரையில் கால்களை நன்கு ஊன்றி, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முன்னும், பின்னும் எழ வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்