தினமும் ஐந்து நிமிடம் இதை செய்தால் போதும்: உடல் வலி குறையும்!

Report Print Jayapradha in உடற்பயிற்சி

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடாமல், 5 நிமிடங்கள் மட்டும் கால்களை உயர்த்தி உடற்பயிற்சி செய்தால் போதும்.

இந்த பயிற்சியை காலை வேளையில் செய்ய வேண்டும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், சுவரை பார்ப்பது போல் எதிர்த் திசையில் படுக்க வேண்டும். அதன் பிறகு, பின்னங்கால்களை நேராக சுவரின் மேற்பரப்பில் சம அளவில் உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது கால்கள் இரண்டும் ‘L' வடிவில், சரியாக 90 டிகிரி கோணத்தில் இருப்பது அவசியம். இவ்வாறு 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். அப்போது கண்களை மூடி, மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும்.

மேலும், தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை கவனிப்பது அவசியம். இந்தப் பயிற்சியின் மூலம், இதயத் துடிப்பு சீராகும்.

கால்களை உயர்த்துவதன் மூலம், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தினால் குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அது சரி செய்யப்படும்.

கால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் ரத்தம் சீராக பாய்வதன் மூலம் அதுவும் குறையும். மேலும், ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் செய்வது மிகவும் சிறந்தது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்