மாரடைப்பை தடுக்கணுமா? அப்போ தினமும் ஜாக்கிங் பண்ணுங்க

Report Print Printha in உடற்பயிற்சி

பொதுவாக சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும்.

உடல் அதிகமாக வியர்க்கும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது, நேரம் ஆக வலி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பின்னர் மூச்சுத் திணறல் உண்டாகும், மயக்கம் வரும், இதற்கு பெயர் தான் மாரடைப்பு.

இந்த மாரடைப்பை தடுக்க நாம் தினமும் காலையில் நடைப்பயிற்சி போன்ற விரைவான மற்றும் வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட மெல்லோட்டம் என்ற பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதை தான் ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

இந்த பயிற்சி மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது.

மேலும் மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக் கொள்ள தினமும் ஜாக்கிங் செய்து வருகிறார்களாம்.

ஜாக்கிங் மூலம் கிடைக்கும் பயன்கள்

  • ஜாக்கிங் செய்யும் போது, இதயம் சுருங்கி உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையை விட அதிகரிக்கிறது.

  • இதய ரத்தக் குழாய்கள் மற்றும் ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகள் வலுவடைகிறது.

  • ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.

  • உயர் ரத்த அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.

  • இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.

  • ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரைகிளிசரைடையும் குறைத்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பினைக் குறைகிறது.

- Maalai Malar

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments