அமெரிக்கர்கள் BOTOX எடுத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமா?

Report Print Givitharan Givitharan in நவீன அழகு

Botox என்பது ஒரு ஒப்பனைப் பொருள். இதை ஒருவர் எடுத்துக்கொள்வது அவரது தோற்றத்தை மெருகேற்றத்தான் என எப்போதும் நினைப்பது தவறு.

ஒரு சிறிய ஆய்வு இது பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த அரை தாசாப்தத்தில் US இல் இவ் உற்பத்தி மிக பிரபல்யமடைந்திருந்தது. கடந்த வருடம் 1.5 மில்லியன் Botox ஊசி பயன்படுத்தப்பட்டிருந்தது.

வடமேற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் நம்மில் பலர் இந்தச் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்திருந்தனர்.

இதற்கென மேற்படி சிகிச்சை தேடுவோரில் 511 பேரை திரட்டியிருந்தனர். இதில் 86 வீதமானவர்கள் பெண்கள், 56 வீதமானவர்கள் குறைந்தது 45 வயதுடையவர்கள். 3/4 பங்கினர் வெள்ளையானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட எல்லோரும் கல்லூரியில் படித்தவர்கள்.

கவர்ச்சியாக தென்படுவதற்கு அப்பால் கிட்த்தட்ட 70 வீதமானோர் தாங்கள் தங்கள் உளவியல் நல் வாழ்வை விருத்திசெய்யவே இச் சிகிச்சை பெறுவதாக கூறியிருந்தனர்.

இதனால் சந்தோசமும், அதிகப்படியான நம்பிக்கையும் கிடைப்தாகச் சொல்கின்றனர். 61 வீதமானோர் நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்காகவும், 59 வீதமானோர் தொழில் சூழலில் நன்றாக தெரிவதற்கும் பயன்படுத்துவதாக சொல்கின்றனர்.

மேலும் 53 வீதமானோர் தங்கள் உடலியல் ஆரோக்கியத்தை பேண இதை மேற்கொள்வதாக சொல்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் மற்றவர்களுக்கு கவர்ச்சியாக தெரிவதற்கு அன்றி தங்களது சந்தோசத்திற்காகவே பயன்படுத்துகின்றனர்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்