சாதிக்க வயது ஒரு தடையில்லை! பேஷன் ஷோவில் அசத்திய தாத்தா

Report Print Fathima Fathima in நவீன அழகு

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என நிரூபித்துள்ளார் 80 வயது முதியவர்.

சீனாவை சேர்ந்த 80 வயதான தேஷுன் வாங் என்பவர் பீஜிங்கில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் 'Cat Walk' செய்து அசத்தியுள்ளார்.

எல்லோராலும் அழகான தாத்தா என்று அழைக்கப்படும் வாங், உடற்பயிற்சி செய்ய தவறியதில்லை.

வயது என்பது வெறும் எண் மட்டுமே, நம் மேல் நாம் நம்பிக்கை வைத்தால் எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வாங்கின் வார்த்தைகளில் தெரிகின்றது.

இது ஒரு இரவில் கிடைத்த வெற்றியில்லை என்று கூறிய வாங், இதற்காக பல வருடங்களாக கடினமாக உழைத்ததாக கூறியுள்ளார்.

மேலும், 24 வயதில் மேடை நடிகராக இருந்தபோது, உடல் மொழியால் செய்யும் மைம் கலையில் சிறந்து விளங்கியுள்ளார்.

நிச்சயம் இவர் “வாழும் சாதனையாளர்” என்பதில் சந்தேகமில்லை.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments