பிறம்ரன் தமிழ் மூத்தோர் கழக ஆண்டு விழாவில் வைத்தியசாலைக்கும் நிதி சேர்த்து சாதனை!

Report Print Akaran Akaran in நிகழ்வுகள்

பிறம்ரன் தமிழ் மூத்தோர் கழக அங்கத்தவர்கள், தங்கள் மூன்றாவது ஆண்டு விழாவை, கோர்மெடோஸ் சனசமூக நிலையத்தில், 2016ஆம் ஆண்டு செப்தெம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள்.

மண்டபம் கொள்ள முடியாத அளவிற்கு கழக அங்கத்தவர்களும் சக கழக அங்கத்தவர்களும் சமூக மக்களும் வருகை தந்து விழாவை இன்பமுடன் கண்டு கழித்தனர்.

ஒன்ராரியோ பழமைவாதக் கட்சித் தலைவர் பற்றிக் பிறவுன், பாராளுமன்ற உறுப்பினர்கள் , Sonia Sidhu MP and Kamal Khera MP, பிரதேசசபை ஊறுப்பினர்கள் Harinder Malhi MPP and VicDillion MPP, பிறம்ரன் நகரசபை உறுப்பினர்கள் GurpreetDhillon, Martin Medeiros, Jeff Bowman,John Sprovieri and Michael Palleschi மேலும் பல தலைவர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மூன்றுஆண்டுகளுக்கு முன் சமூகத்திற்கும் பிறம்ரன் நகர அங்கத்தவர்களுக்கும் இருந்தஇடைவெளியை அகற்றி நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி செயல்படும் நோக்கமாக, ஐந்து முன்னோக்க வாதிகளினால் பிறம்ரன் தமிழ் மூத்தோர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று 300க்குக் கூடிய அங்கத்தவர்களைக்கொண்டுள்ளது. இவர்கள் வாரம் தோறும் கோர் மெடோஸ் சமூக நிலையத்தில் கூடி ஓக அப்பியாசம், கருத்தரங்குகள், அறிவை வளர்த்தல், அறிவைப் பகிர்தல், கலை கலாச்சார நிகழ்வுகள், கணினி வகுப்புகளில் கற்றல், சிறிய பெரிய சுற்றுலாக்கள், ஆகிய பல்வேறு நிகட்சிகளில் பங்கேற்று உடல்உள நலன்களை மேம்படுத்தும் செயல்களை வகுத்து இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

அங்கத்தவர்கள் முழு அர்ப்பணிப்புடன்செயல்படுவதால் முதியோர்களுக்கான 'நியூ கொறைசன்' நிறுவனம் ஒன்ராரியோ மூத்தோர் செயலாளர் அலுவலகம், பிறம்ரன் நகரசபை ஆகியோர்களிடமிருந்து நன்கொடைப் பணம்பெற்று சிறந்த முறையில் இக்கழகம் இயங்கி வருகின்றது.

இன்று, பிறம்ரன் மூத்தோர் கழகம், முதியோர்களின் வலுவான ஒரு குரலாகஒலிக்கிறதென்றால் மிகையாகாது.

மூன்றாம் ஆண்டு விழாவில் பாட்டு, நடனம், நாட்டிய நடனம், சீன மக்களின் சமூக நிகழச்சிகள், ஆகியன சிறப்பாக நடைபெற்றன. முதியோர்கள் நிகழ்த்திய மாதிரி தமிழ்க் கலியாணம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கழகத்தலைவர் டேவிட் இராசரத்தினம், தனது உரையில், சென்றமூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பல விடயங்களை எடுத்துரைத்தார்.

கடைப்பிடிக்கப்பட்ட ஒவ்வொன்றும் கழக அங்கத்தவர்களின் உடல் உள நலன்களை மேம்படுத்துவனவாகஇருந்துள்ளன என வற்புறுத்தினார்.

கழக அங்கத்தவர்கள் பல் வைத்தியம் செய்வதற்கு உதவிப் பணம் வழங்கப்படுவது கழகசெயற்பாட்டில் ஒரு மைற்கல்லாகும் எனப் பெருமையுடன் கூறினார்.

நடத்தப்பட்ட குலுக்குச்சீட்டில் பெற்ற பணம் முழுதாகபிறம்ரன் வைத்தியசாலைக்குக் கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இருபத்தைந்து குலுக்கல் சீட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவையான இராப் போசனத்துடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் இனிது நிறைவேறியது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments