ஐரோப்பாவை நோக்கி 100-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் வந்த படகு விபத்தில் சிக்கியது! கதறி அழுத தாயின் வீடியோ காட்சி

Report Print Santhan in ஐரோப்பா
504Shares

நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் வந்த படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், 74 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை இழந்துவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி வெளியாகி வேதனையை உலுக்கியுள்ளது.

கடந்த புதன் கிழமை லிபியாவில் இருந்து சுமார் 116 புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட படகு ஒன்று, கடலில் விபத்தில் சிக்கியதால், படகில் இருந்த சுமார் 74 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், அதில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை பார்த்தீர்களா? அவளை இழந்துவிட்டேன் என்று வேதனையுடன் கேட்கிறார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கினியாவைச் சேர்ந்த பெண் அலறுவதைப் பார்க்கும் போது கண்கலங்குகிறது.

இந்த விபத்தின் போது, இறுதியாக ஸ்பானிஷ் மீட்பு படையினரால், அவர் மீட்கப்பட்டார். ஆனால் அவரது குழந்தை இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரிக்கார்டோ காட்டி இது குறித்து கூறுகையில், துறைமுக நகரமான சப்ராதாவை விட்டு வெளியேறிய மூன்று மணி நேரத்திற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீரில் உயிருக்கு போராடினர். அதில் சில குழந்தைகளும் இருந்தனர். குறித்த குழந்தையின் தாயார் அங்கு வேதனையுடன் சுற்றித் திரிந்ததை பார்க்க முடிந்தது.

குழந்தை இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது. அதன் பின் அதிகாரிகள் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக நிலப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், குழந்தை வரும் வழியிலே சுவாசக் கோளாறு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துவிடுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடையே மத்தியதரைக் கடலில் மூன்று வெவ்வேறு கப்பல் விபத்துக்களில் இருந்து லிபியாவிலிருந்து தப்பிச் சென்ற 263 புலம்பெயர்ந்தோரை மீட்டதாக ஓபன் ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளது.

ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சிகிச்சைக்காக இத்தாலிய நிலப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீதமுள்ள புலம்பெயர்ந்தோர், இறந்த உடல்களுடன், மீட்புக் கப்பலில் ஏறி இறங்குவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் மத்தியதரைக் கடல் முழுவதும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு 800-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

அதே நேரத்தில் 72,000-க்கும் அதிகமானோர் வெற்றிகரமாக ஐரோப்பாவை அடைந்துள்ளனர். முயம்மர் கடாபி அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தப்பிச் செல்லும் புலம்பெயர்ந்தோரின் முக்கிய போக்குவரத்து புள்ளியாக லிபியா உருவெடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்