உலகிற்கு ஆபத்தா.? கிரீன்லாந்தில் ஒரே நாளில் நடந்த உறைய வைக்கும் சம்பவம்: சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி

Report Print Basu in ஐரோப்பா

ஐரோப்பா நாடான கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியிருப்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிரீன்லாந்தில் நேற்று 22°C வெப்பம் பதிவானதால் ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளது. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம்.

வழக்கமாக, கோடையின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறையும் நிகழ்வும் வழக்கமாக நடந்து வருவதாகும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் ஆர்ட்டிக் பகுதியிலும் எதிரொலித்தன. இதன் காரணமாகவே பனி உருகுதல் அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று மிகப்பெரிய பனி உருகல் கடந்த 1950ம் ஆண்டு நிகழ்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியது கடல் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers