பங்கீ ஜம்பிங்கில் விபரிதம்.. அந்தரத்தில் கயிறு அறுந்து தரையில் மோதிய நபர்: திகில் வீடியோ

Report Print Basu in ஐரோப்பா

ஐரோப்பா நாடான போலந்தில் பங்கீ ஜம்பிங் பிரியர் ஒருவர், ஜம்பிங்கின் போது அந்தரத்தில் கயிறு அறுந்து தரையில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேடி யூரோபி தீம் பார்க்கிலே இச்சம்பவம் நடந்துள்ளது. 39 வயதான நபர் ஒருவர், 92 மீட்டர் உயர கிரேன் மீதிருந்து, காலில் கயிறு கட்டிய படி பங்கீ ஜம்பிங் செய்தார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தரத்தில் கயிறு அறுந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானார். அதிர்ஷ்டவசமாக கீழே பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த குஷன் மீது விழுந்த பிறகு தரையில் மோதினார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே சமயம், விபத்தில் சிக்கிய நபருக்கு பல உறுப்பு செயலிழப்புகள் மற்றும் முதுகெலும்பு முறிந்துவிட்டது என்று ட்ரோஜ்மியாஸ்டோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அவர் இப்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கீ கயிற்றில் ஒரு விரிசலைக் கண்டறிந்ததாக பொலிசார் கூறுகிறார்கள், ஆனால் அது விபத்துக்கான முக்கிய காரணமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. குதித்த தருணத்தில் அந்த நபர் மது போதையில் இருந்ததாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்