அயர்லாந்து ரயிலில் இந்திய குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி

Report Print Basu in ஐரோப்பா

அயர்லாந்தில் இந்திய குடும்பத்தினர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ப்ராசுன் பட்டாச்சார்யா, 3 நாள் விடுமுறையில் குடும்பத்தினருடன் அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு, பெல்பாஸ்ட் என்ற இடத்திலிருந்து டப்ளின் என்ற இடத்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது, அவர் அருகில் அமர்ந்திருந்த போதையில் இருந்த நபர் ஒருவர், ப்ரசுன் பட்டாச்சார்யா மற்றும் அவரது குடும்பத்தினரை நிறம், மொழி, நாடு ஆகியவற்றை கூறி இனரீதியில் அவமானப்படுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பட்டாச்சார்யா கூறுகையில், டப்ளின் நகர் சென்றடையும் வரை, அந்த நபர் அவமானப்படுத்தி வந்தார். இது எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அயர்லாந்து குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் இனரீதியான பிரச்னைகளை இன்னும் தீவிரமாக அணுக வேண்டும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என அந்நாட்டின் குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்