அடுத்த வாரம்... முதியவர்கள், குழந்தைகளுக்கு ஆபத்து.. ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை

Report Print Basu in ஐரோப்பா

ஐரோப்பாவில் அடுத்த வாரம் கோடை தொடங்கவுள்ள நிலையில் பிராந்தியத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல்கள் இந்த வார இறுதி வரை தான். ஆனால், அடுத்த வாரம் ஐரோப்பியர்கள் புழுக்கத்தை சந்திக்க தயராக இருக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை எட்டும், இது வடக்கு ஸ்பெயினில் 40 டிகிரியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்காவிலிருந்து வெப்பமான காற்று அதிகரிப்பதால் ஐரோப்பியாவில் வெப்பநிலை உயரும். திங்கட்கிழமை முதல் அதிகரிக்கும் வெப்பம் வெள்ளிக்கிழமை வரை தொடரும். ஆனல் காற்ற வீசும், இது பிராந்தியத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தானது.

மாட்ரிட்டில் இருந்து பாரிஸ், பெல்ஜியம், பிராங்பேர்ட் மற்றும் பெர்லின் வரையிலான பல இடங்கள் கடுமையான ஆனல் காற்றை எதிர்பார்க்கலாம், தினசரி வெப்பநிலை 32 செல்சியாஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை காலம் குறுகிய காலமாக இருந்தாலும் இந்த ஆனல் காற்று அதன் வேகத்திற்கும் தீவிரத்திற்கும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers