செல் போன் யுகம் முடிவுக்கு வருகிறதா? ஒரு அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in ஐரோப்பா

மொபைல் போன்கள் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்ற நிலையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 20 ஆண்டுகளில் மொபைல் போன்கள் இல்லாமல் போகும் ஒரு நிலை வரலாம் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வகை வகையாக மொபைல் போன்கள் வாங்குவது போதாதென்று, ஒன்றிரண்டு வருடங்களில் போனை மாற்றுவது, புதிய மொடல் போன் வந்ததும் பழைய போனை தூக்கி எறிவது என மொபைல் புரட்சியே நடந்து வரும் கால கட்டத்தில், மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமங்கள் பல அருகி வருவதாகவும், இதனால் 20 ஆண்டுகளில் மொபைல் போன், தொலைக்காட்சி முதலான கருவிகள் இல்லாத ஒரு நிலை வரலாம் என்றும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகில் உள்ள தனிமங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தும் தனிம அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று புதிய தனிம அட்டவணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அந்த அட்டவணையில் தனிமங்களின் பெயர்கள் வெவ்வேறு நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவப்பு மற்றும் அது சார்ந்த நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தனிமங்கள் நிலத்தில் கிடைப்பது குறைந்து வருவதால் அவை அருகி வரும் தனிமங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் மொபைல் போன்கள் செய்யப் பயன்படுத்தப்படும் சில தனிமங்களும் அடங்கும். மிகவும் குறைந்த அளவில் காணப்படும், கிடைக்காமல் போகலாம் என கருதப்படும் காலியம், ஆர்சனிக், யிட்ரியம் மற்றும் வெள்ளி ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

இயற்கையில் கிடைக்கும் 90 தனிமங்களில், 30 தனிமங்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டுமே, ஒரு மாதத்திற்கு 10 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் குப்பையில் வீசியெறியப்படுகின்றன அல்லது புதிதாக மாற்றப்படுகின்றனவாம்.

மொபைல் போன் செய்வதற்கு பயன்படும் தனிமங்கள் பல பூமியில் கிடைப்பது குறைந்து வருவது, மற்றும் சிலவற்றை மறு சுழற்சி செய்ய முடியாதது போன்ற விடயங்கள் குறித்து அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை உலகுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த நிற மாற்றம் செய்யப்பட்ட தனிம அட்டவணை இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் லேபர் கட்சி உறுப்பினர்களான Catherine Stihler மற்றும் Clare Moodyஆல் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers