பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டத்திற்காக ஐக்கிய ஒன்றிய பிரபலம் செய்த வித்தியாசமான செயல்

Report Print Balamanuvelan in ஐரோப்பா

உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கெதிரான பேரணிகளில் பெண்கள் பங்கேற்றுவரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தலைவர், அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தனது உரையின் நடுவில் தன் கண்களுக்குக் கீழே லிப் ஸ்டிக் அணிந்துகொண்டார்.

பிரெக்சிட் உச்சி மாநாட்டின் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தலைவரான Antonio Tajani தனது பேச்சின் நடுவில் லிப் ஸ்டிக்கினால் தனது கண்ணுக்கு கீழே வரைந்து கொண்டார்.

பல பெண்கள் அனுபவிக்கும் வன்முறைக்கு அடையாளமாக அதை வரைந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கெதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று தெரிவித்த Antonio Tajani, இதை நான் என் தாயிடமிருந்து கற்றுக்கொண்டேன், இப்போது அதை என் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்றார்.

Antonio Tajani, ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம் இவ்விதம் செய்துள்ளார்.

சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி நினைவுகூறப்படுகிறது.

உலகம் முழுவதிலும் ஆதரவாளர்கள் தெருக்களில் நடத்திய பேரணிகளின் படங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers