வெளிநாட்டிற்கு கார் கழுவ சென்ற இந்தியர்! இன்று எத்தனை நிறுவனங்களுக்கு உரிமையாளர்? 29 வருட பயணம்

Report Print Abisha in தொழிலதிபர்

இந்தியாவில் இருந்து கார் கழுவும் வேலைக்காக அபுதாபி சென்று, இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தகாரரான ஷாஜஹான் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் கேரள மாநில கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாஜஹான். இவர் படிப்பில் சிறந்து விளங்கினாலும், வீட்டில் வசதி குறைவு காரணமாக அதை தொடர அனுமதிக்கவில்லை.

எனவே அரபு நாடான அபுதாபியில், கார் கழுவும் வேலை செய்து வந்த ஷாஜஹானின் தந்தைக்கு உதவும் வகையில், இவரும் அந்நாட்டுக்கு பறந்தார்.

29 வருடங்களுக்கு முன் தனது 20 வயது இருக்கும் போது அபுதாபிக்கு வந்த அவருக்கு கார் கழுவும் போது 700 திர்காம் சம்பளம் கிடைத்துள்ளது. அதனுடன் கார் உரிமையாளர்கள் வழங்கும் சில்லறை பணங்களும் கிடைத்துள்ளது. ஆனால், அது வாழ்க்கையின் தேவையை பூர்த்தி செய்யாது என்று உணர்ந்த ஷாஜஹான், கிடைக்கும் நேரங்களில் உணவகங்களில் வேலைக்காக சென்றுள்ளார்.

இவ்வாறு 10 வருடங்கள் தனது கஷ்டமான சூழல்களை கடந்து Oasis என்ற கார் கழுவும் நிறுவனத்தை தொடங்கினார் ஷாஜஹான்.

அதன் பின் தொடர்ந்த முயற்சியால், இந்தியா, பாகிஸ்தான், பிலிபையின்ஸ்,எகிப்த் உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள கார் கழுவும் நிறுவனங்களின் சொந்தக்காரராக இருக்கிறார் ஷாஜஹான்.

அதற்கு மேல் இரண்டு சூப்பர் மார்கெட்கள், 7 சலூன்கள் அவரது சொந்த நிறுவனங்களாக உள்ளது.

அபுதாபிக்கு வந்த பின் பேச மலையாள மொழி மட்டும் போதாது என்று உணர்ந்த ஷாஜஹான், தற்போது 4மொழிகளை கற்று தேர்ந்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ஷாஜஹான் “படிப்பு அல்ல, மனிதனின் உழைப்பே வெற்றியை நிர்ணைக்கும். மேலும், நான் எதிர்பார்த்ததை விட நல்ல நிலையில் தற்போது உள்ளேன். என்னுடைய முக்கிய கொள்கையே உண்மையாக இருப்பது, தொழிலாளிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பது, மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

பிளைப்பு தேடி வெளிநாட்டிற்கு செல்பவர்கள் தற்போதும் இந்தியாவில் அதிகமே. அவர்கள் அனைவருக்கும் ஷாஜஹானின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்...

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்