ரிக்ஷா ஓட்டி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த உலகப் பணக்கார்

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்

உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் திகழ்ந்தவர் அமேஷான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jeff Bezos.

எனினும் தற்போது இவரைப் பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்ஹேட்ஸ்.

இந்நிலையில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமேஷான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அங்கு எலக்ட்ரோனிக் ரிக்ஷா வாகனத்தினை ஓட்டியுள்ளார்.

உலகப் பணக்காரர்களின் ஒருவரான Jeff Bezos ரிக்ஷா ஓட்டுவதைப் பார்த்து அனைவரும் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீடியோவினை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் எலக்ட்ரோனிக் ரிக்ஷாக்களை பயன்படுத்தி அமேஷான் நிறுவனம் டெலிவரிகளை செய்யவுள்ளமைக்கான விளம்பரமே இதுவாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்