மருத்துவ குளறுபடியே ராஜகோபால் மறைவிற்கு காரணமா? சொத்துக்கள் யாருக்கு? நண்பரின் பதில்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் ஜோதிடம், பெண்ணாசை மற்றும் மண்ணாசை போன்றவைகளால் மிகுந்த மன அழுத்திற்குள்பட்டு, உயிரிழந்த சரவணன் ராஜகோபாலுக்கு என்ன நோய் இருந்தது, இனி அவரின் சரவணபவன் ஹோட்டல் கிளைகளை யார் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் என்பதை அவரின் நெருங்கிய நண்பர் சார்லஸ் கூறியுள்ளார்.

சரவணபவன் என்றால் நம் நினைவுக்கு வருவது, வெண் பொங்கல், இட்லி வாழை இலை சாப்பாடு, அப்படி பெயர் பெற்ற நிறுவனத்திற்கு சொந்தக்காரரான ராஜாகோபால் தன்னுடைய கடைசி காலகட்டத்தை மிகவும் மோசமாகவே கடந்துள்ளார்.

ஜீவஜோதி கணவன் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைது என்று கூறப்பட்ட பின்னர் அவரின் உடல்நிலை மோசமானது, இதனால் ஏற்கனவே சிகிச்சை பார்த்து கொண்டிருந்த மருத்துவமனையிலிருந்து வேறொரு மருத்துவமனைக்கு ராஜகோபால் மாற்றப்பட்ட அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ராஜகோபால் நண்பர் சார்லஸ் கூறுகையில், அவர் ஏற்கனவே சிகிச்சை எடுத்து கொண்டு தான் வந்தார். விஜயா மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால், அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு சென்றவுடன் அப்படியே சிகிச்சை முறை மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்த சிகிச்சை மாற்றம் தான் அவர் சீக்கிரம் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம், இந்த சிகிச்சை மாற்றம் அவருக்கு ஒத்துவரவில்லை, அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது.

இதனால் 85 சதவிகிதம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்ட்ரோக், ஒருபுறம் கை, கால்கள் செயல்படவில்லை. அவரால் சாப்பிடக்கூட முடியாது; யாராவது ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவார். கல்லீரலில் பிரச்சினை என மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

அவர் எப்போதும் வழக்கமாக பயன்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்த ஸ்டான்லியில் அனுமதிக்கவில்லை. அரசு மருத்துவர்கள் தனியாக வேறொரு மாத்திரைகளை வழங்கி வந்தனர்.

அவருக்கு எந்தமாதிரியான பிரச்சனை இருக்கிறது, உடல்நிலை குறித்து அறியவே, அரசு மருத்துவர்களுக்கு நேரம் தேவைப்பட்டது.

இதற்கு முன்பு அவர் சிகிச்சை எடுத்த தனியார் மருத்துவர்களிடமும் அவர்கள் கருத்துக்களை கேட்கவில்லை, அப்படி அவர்கள் கருத்து கேட்டிருந்தால், என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும்.

அவர் நீண்ட நாள் இருந்திருப்பார். அவர்கள் ஒருவகையான மருத்துவமும், இவர்கள் ஒருவகையான மருத்துவமும் பார்த்துள்ளனர். அது தான் கடைசியில் சிக்கலில் போய் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் இருக்கும் சரவணபவன் கிளைகளை அவரின் சிறிய மகன் சரவணனும், வெளிநாட்டில் இருக்கும் கிளைகளை அவருடைய மூத்த மகன் சிவக்குமாரும் பார்த்து கொள்வார்கள். இதை அவர் உயிருடன் இருக்கும் போதே இருவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டார்.

இதில் சிவக்குமார் வெளிநாடுகளுக்கு அதிகம் சென்றுள்ளதால் அவர் வெளிநாட்டில் இருக்கும் கிளைகளை கவனிப்பதில் எளிதாக இருக்கும் என்பதற்காகவே சிவக்குமாருக்கு வெளிநாட்டு கிளையை கொடுத்துள்ளார் என கூறி முடித்தார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்