மண்ணாசை....பெண்ணாசை மட்டுமா? சரவணபவன் ராஜகோபால் சரிந்ததற்கு முக்கிய காரணமே இது தான்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் ஜீவஜோதி கணவன் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியான் சரவணன் கோபால் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவர் சரிந்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

திருமணம் ஆகி 2 மனைவிகள் இருந்தாலும், குடும்பத்தில் குட்டி குட்டி குழப்பங்களும், சின்ன சின்ன சிக்கல்களும் ராஜகோபால் வாழ்க்கையில் வந்து கொண்டே இருந்தன.

இதன் காரணமாகவே பிரச்சனைகளுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்ப ஜோசியரை போய் சந்தித்தார் அவர், அப்போது அந்த ஜோசியரோ, நீங்கள் இளம்பெண்ணை 3-வதாக கல்யாணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, வானளாவிய பணக்காரனாகி விடலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று கூறியுள்ளார்.

இப்படி ஜோசியக்காரர் சொல்லும்போதே அண்ணாச்சிக்கு வயசு 50. இதனால் இளம்பெண்ணை யார் முன்வந்து கட்டி தருவார்கள்? எங்கெங்கோ தேடினார். கடைசியில் தான் ஹோட்டலில் வேலை பார்க்கும் மேனேஜரின் மகளான ஜீவ ஜோதி கண்ணில் சிக்கினார்.

அந்த பெண் ஒருவரை காதலிப்பது தெரிந்ததும், காதலித்தவரையே கல்யாணம் செய்து கொண்டது தெரிந்தும், பணத்தாசையை பெற்றோரிடம் காட்டினார் அவர், சில சொத்துக்களை கூட தருவதாக வாக்கு கொடுத்தார்.

பெற்றோர் மசிந்தனரே தவிர, ஜீவஜோதி மசியவில்லை. கட்டிய கணவனிடமே மனைவியை விட்டுத்தரும்படி வாய்கூசாமல் கேட்கும் அளவுக்கு வயசை மீறி நடந்து கொண்டார் ராஜகோபால். அதன்பிறகும் பணப்பேய் அவரை ஆட்டு ஆட்டு என ஆட்டுவித்தது.

தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர், ஒரு பிரபல நபர், 50 வயதை தாண்டிய பெரிய மனிதன் என்பதை எல்லாம் தூக்கி எறிந்து கொலை திட்டத்துக்குள் தன்னை ஆட்படுத்தி கொண்டார்.

அதை நிறைவேற் முடிவு செய்தார். நீதிமன்ற படியை முதன்முதலாக ஜீவஜோதிக்காக ஏறினார். பணபலம், செல்வாக்கால் பலமுறை வந்தாலும், ஜீவஜோதி தந்த சாட்சியம் அவரை சுக்குநூறாக நொறுக்கி விட்டது.

தன்னை காட்டியே தர மாட்டார் என்று நம்பிய நேரத்தில் என் கணவருடன் என்னை அண்ணாச்சி சேரவே விடவில்லை. அவருடன் உறவு வைத்து கொள்ள கூடாது. அதுமட்டுமின்றி எனக்கு பல வகையில் தொந்தவு தந்தார்.

கடைசியில் என் கணவனையும் கொன்றுவிட்டார் என்று சாட்சியம் தந்த பின்னரே தண்டனைவாசம் ராஜகோபாலை நெருங்கியது.

பிரமிக்கத்தக்க வளர்ச்சி இருந்தால்தான் என்ன? கோடி கோடியாய் பணம் கொட்டி கிடந்தால்தான் என்ன? செல்வாக்கும் புகழும் குவிந்து கிடந்தால் என்ன, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ராஜகோபால் நாசம் செய்து கொண்டார்.

ஒருவேளை அண்ணாச்சி அந்த ஜோதிடரை சந்திக்காமல் இருந்திருந்தால், அண்ணாச்சி கண்ணில் ஜீவஜோதி படாமல் இருந்திருந்தால், ராஜகோபால் சாம்ராஜ்யத்தை யாரும் அசைத்து கூட பார்த்திருக்க முடியாது என்பது தான் உண்மை.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்