பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 100 கோடீஸ்வரர்கள்...! அப்போ சம்பளம் ?

Report Print Santhan in தொழிலதிபர்

முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில் 103 ஊழியர்களின் ஆண்டு வருவாய் ஒரு கோடிக்கு மேல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 மற்றும் 19 நிதியாண்டில், டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உள்ளிட்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் இந்த நிறுவனத்தின் CE0-வான ராஜேஷ் கோபிநாதன், coo என்.ஜி.சுப்ரமணியம் ஆகியோரை தவிர்த்து 103 ஊழியர்களின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

இதுவே கடந்த 2016-17 நிதியாண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 91 ஆக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது.

டி.சி.எஸ் லைப் சயின்சஸ், ஹெல்த்கேர் அண்ட் பப்ளிக் சர்வீசஸ் பிசினஸ் பிரிவின் தலைவர் டெபசிஸ் கோஷ் 4.7 கோடி ரூபாயும், பிசினஸ் & டெக்னாலஜி சர்வீசஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் ராமானுஜம் 4.1 கோடி ரூபாயும், நிறுவனத்தின் பேங்கிங், பைனான்ஸியல் சர்வீசஸ் அண்ட் இன்ஷூரன்ஸ் பிசினஸ் பிரிவின் தலைவர் கீர்த்திவாசன் 4.3 கோடி ரூபாயும் ஆண்டு வருமானமாகச் சம்பாதிக்கிறார்கள்.

இந்த கோடீஸ்வரர்களின் வரிசையில் 72 வயதுடைய நபர் ஒருவரும் இருக்கிறார். இதே போன்று

மற்றொரு முன்னணி மென் பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 60 ஊழியர்கள் வரை ஆண்டு வருமானமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இன்போசிஸ் நிறுவன ஊழியர்களைப்போல் பங்குகள் அடிப்படையிலான ஊக்கத்தொகை, டி.சி.எஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்