தனது சகோதரர் சிறைக்கு செல்வதிலிருந்து காப்பாற்றிய முகேஷ் அம்பானி!

Report Print Kabilan in தொழிலதிபர்

உச்ச நீதிமன்ற கெடு நிறைவடையும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் 550 கோடி ரூபாய் அனில் அம்பானி செலுத்தியதால் சிறைக்கு செல்வதை தவிர்த்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பராமரிப்பதற்காக எரிக்சன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ஒப்பந்தப்படி பணத்தை செலுத்தாததால் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் எரிக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து இன்றைக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் 3 மாதங்கள் சிறை செல்ல வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டித் தொகையை சேர்த்து மொத்தமாக 550 கோடியை அனில் அம்பானி நேற்று செலுத்தினார். இதற்கு அவரது சகோதரர் முகேஷ் அம்பானி உதவியதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் சிறை செல்வதில் இருந்து தப்பித்தார். பணம் கிடைத்ததை எரிக்சன் நிறுவனமும் உறுதி செய்தது. இந்நிலையில், இக்கட்டான நேரத்தில் உதவியதற்காக தனது சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோருக்கு நன்றி கூறுவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்