அன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி..... இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்: 10 நிமிட உற்சாக கதை

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்

மும்பையில் 15 ரூபாய்க்கு கூலித்தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்த சுதீப் தாத்தா தனது கடின உழைப்பால் 1,685 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் அதிபதி ஆகியுள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சுதீப் உத்வேமாக திகழ்கிறார்.

சுதீப்பின் தந்தை ஒரு இராணுவ வீரர் ஆவார், வங்கதேசத்தில் போரின் போது குண்டடிபட்டு இறந்துவிட்டார், மூத்த சகோதரரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதையடுத்து, சுதீபின் தாய் மற்றும் நான்கு சகோதரிகளை காப்பாற்றும் பொறுப்பு சுதீபிற்கு வந்தது.

பொறியியல் படிப்பை படிக்க வேண்டும் என்பது சுதீப்பின் ஆசையாக இருந்துள்ளது, ஆனால் தந்தை மற்றும் மூத்த சகோதரை இழந்த காரணத்தால் தனது படிப்பை தொடர முடியாமல் மும்பையில் ஒரு பேகிஜிங் தொழிற்சாலையில் தொழிலாளராக பணியில் சேர்ந்தார். ஒரு நாளைக்கு அவரது சம்பளம் 15 ரூபாயாக இருந்தது.

தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு நடந்தே சென்றார் சுதீப். போக்குவரத்து செலவை குறைத்து அந்த பணத்தை ஊரில் உள்ள தன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த தொழிற்சாலை நஷ்டத்தில் போனதால் அதை மூட அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். ஆனால் சுதீப் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு,16000 ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் அளித்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

அதில் லாபம் ஏற்பட்டால் அதை பங்கு கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் சுதீப்.

வளர்ந்து வரும் துறையான ஃபார்மா துறையை இலக்காக கொண்டு சுதீப் தங்களது பேகேஜிங் பணிகளை அதனை நோக்கி செயல்படுத்தினார். இது பற்றி அவர் லைவ் மிண்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில்,

Ess Dee நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வது மட்டும் என் இலக்கு அல்ல, இதை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கி, சர்வதேச நிறுவனங்களான யூனிலீவர், P&G போல் உயரிய இடத்தில் கொண்டு செல்லவேண்டும்,” என்றார்.

நவம்பர் 2008 இல் சுதீப், இந்தியா பாயில்ஸ் நிறுவனத்தை வேதாந்தாவிடம் இருந்து 130 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தினார்.

இன்று சுதீப், தன் நிறுவனத்தை நிலையாக வளர்த்து, 1,685 கோடி ரூபாய் மதிப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பேகேஜிங் முறைகளை இவரது நிறுவனம் கையாண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்