மல்லையாவின் சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை!

Report Print Jubilee Jubilee in தொழிலதிபர்

இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடனை அடைக்க முடியாமல் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டியலில் அவரது கார்கள், விமானங்கள் போன்றவையும் அடங்கும். இதில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரது பல கோடி மதிப்பிலான விண்டேஜ் கார்கள், விலை உயர்ந்த சொகுசு கார்கள் அனைத்தும் மிக சொற்ப விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி நடந்த ஏலத்தின் போது மல்லையாவின் கார்கள் எதிர்பார்த்த அளவு விலை போகவில்லை. இதில் 8 விண்டேஜ் கார்கள் உள்பட மொத்தம் 30 கார்கள் ஏலம் விடப்பட்டன.

அதில், அவர் ஆசையாய் வாங்கி பயன்படுத்திய பல கோடி மதிப்புடைய விலை உயர்ந்த கார்கள் மிக குறைந்த விலைக்கு ஏலம் போனது.

அதேநேரத்தில், விண்டேஜ் கார்கள் நல்ல விலைக்கு ஏலம் போய் வியக்க வைத்தன. அவர் வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் ரூ.2 கோடி மதிப்புடையது. ஆனால் இந்த கார் வெறும் ரூ.7.8 லட்சத்திற்கு ஏலம் போனது.

அதேபோல் பென்ட்லீ சொகுசு கார் ரூ.44 லட்சத்திற்கு ஏலம் போனது. பல கோடி மதிப்புடைய இந்த காரை வந்த விலைக்கு விற்றுவிட்டனர்.

மேலும், குதிரை பந்தய மைதானத்திற்கு செல்லும்போது மல்லையா பயன்படுத்திய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ரூ.2.42 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

போர்ஷே பாக்ஸ்டர் (ரூ.44.5 லட்சம்), மெர்சிடிஸ் பென்ஸ் SLK (ரூ.29.25 லட்சம்), ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் (ரூ.77.2 லட்சம்) உள்ளிட்ட பல சொகுசுக் கார்கள் குறைந்த விலைக்கே ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments