நடிகர் அமிதாப்பச்சனின் 4 பங்களாக்கள் சீல்: 30 ஊழியர்களுக்கு கொரோனா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் மகன் மருமகள் பேத்தி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது நான்கு இல்லங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அமிதாப் மற்றும் அவரது மகன் அபிஷேக்.

இந்நிலையில் மும்பையில் அமைந்துள்ள ஜல்சா, பிரதிக்ஷா, ஜனாக், வெஸ்டா என அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களில் பணியாற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து 4 பங்களாக்கள் சீல் வைக்கப்பட்டன.இந்நிலையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் நலம் விசாரித்தும், விரைவில் குணமடைய வாழ்த்தியும் வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்