நடிகை ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா! தடை செய்யப்பட்ட பகுதியாக மாறிய அமிதாப் இல்லம்: வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான அமிதாப்பச்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, இன்று அவரின் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்திக்கு கொரோனா உறுதியானதால், அவர்களின் இல்லம் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா நோய் திரைப்பிரபலங்கள் பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்று கூறலாம்.

அப்படி இந்தியாவில் திரைப்பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பாலிவுட் திரையுலகின் பிதாமகன் என்று கூறப்படும் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

அதைத் தொடர்ந்து இன்று அபிஷேக் பச்சனின் மனைவியும், உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அதிரடி செயலில் இறங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சனின் இல்லமான ஜல்சா முன்பு நோட்டீஸ் ஓட்டிய கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையிலும் துரித பணியில் அதிகாரிகள் ஈடுபட்டது, வீட்டிற்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதும் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அமிதாப்பச்சன் வீட்டின் அருகே செல்ல அப்பகுதி மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்