நடிகை ஐஸ்வர்யாராய், அவரது மகளுக்கும் கொரோனா உறுதி! ஒட்டு மொத்த குடும்பத்தையும் தாக்கி வரும் துயரம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அதே போன்று அவரது மகளுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன்.

பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக பேசப்படுபவர்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியாக இல்லை என்பதால் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக, அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, அவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் சோதனை செய்ய வேண்டும் அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. அதில், அவரின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின், ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்கள் முடிவிற்காக காத்திருந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது 8 வயது மகளான ஆராத்யாவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கொரோனா உறுதியாகி வருவதால், அமிதாப்பச்சனின் ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்