என் உருவத்தையும் குடும்பத்தையும் தவறாக பேசிட்டாங்க! இனி நான்... வனிதாவுக்கு சினிமா பிரபலம் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை வனிதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன்.

விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மேலும் இவரது மூத்த மகன் முதல் கணவருடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் வனிதா கடந்த ஜூன் 27ஆம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் விமர்சித்து வந்தனர்.

இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து பணித்த அவரின் உடல் எடையையும் குடும்பத்தையும் விமர்சனம் செய்து வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனால் கடுப்பான அந்த தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வனிதாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் என்னுடைய உருவத்தையும் என் குடும்பத்தையும் கண்டபடி பேசிட்டாங்க. இனி நான் ஏன் சும்மா இருக்கணும்.

நான் ஒன்னும் உன் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இல்ல, இந்த இடத்தில பீட்டர் பாலா இருந்திருந்தா அடிச்சு துவம்சம் பண்ணி இருப்பேன் என கூறியுள்ளார்.

நான் ஒரு பொண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தான் இவ்வாறு பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்