பிரபல நடிகை ரேகாவின் பிரம்மாண்ட பங்களாவுக்கு திடீரென வைக்கப்பட்ட சீல்! வெளிவந்த காரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கொரோனா தொற்று பரவியதால் பிரபல நடிகை ரேகாவின் பிரம்மாண்ட பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை ரேகா. பழம்பெரும் ஹீரோ ஜெமினிகணேசனின் மகளான இவர், குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர்.

இவர் மும்பையில் பாந்த்ராவில் பிரமாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். இவரது பங்களாவுக்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடு இது என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை ரேகாவுக்கோ, அவரது வீட்டில் உள்ள யாருக்குமோ, கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

பின்னர் விசாரித்தபோது நடிகை ரேகாவின் வீட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றியவருக்கு கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, அவர் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

நடிகை ரேகாவின் வீட்டில் இரண்டு காவலாளிகள் பணியாற்றுகின்றனர். அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் மும்பை மாநகராட்சி மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நடிகை ரேகா அவர்களிடம் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. தனியாக பரிசோதனை செய்து அறிக்கையை மாநகராட்சிக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்