கடைசி ஆசை நிறைவேறாமலே உயிரிழந்த பிரபல நடிகை மேக்னாவின் கணவர்! கசிந்த வாட்ஸ் அப் சேட்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரும், நடிகை மேக்னாரஜின் கணவருமான சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி ஆசை நிறைவேறாமலே உயிரிழந்திருக்கும் சம்பவம் ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத் திரைத்துறையின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார்.

39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் மரணச் செய்தி கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதநாயாகியாக நடித்திருந்த நடிகை மேக்னா ராஜை, சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்தார். தற்போது மேக்னா ராஜா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவரின் இறுதிச்சடங்கின் போது மேக்ரான் ராஜ், தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் முகத்தை பார்த்து கதறி அழுததோடு, அவருக்கு முத்தமிட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பலரையும் கண்கலங்க வைத்தது.

அதுமட்டுமின்றின்றி நடிகரான சரத்குமார், சிரஞ்சீவி சர்ஜாவின் மாமா என்பதால், அவர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறப்பை தாங்க முடியாமல் கண்கலங்கிய புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில் தற்போது சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போயுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது நண்பரான பிரஜ்வால தேவ்ராஜிடம் வாட்ஸ் ஆப்பில் சேட் செய்த புகைப்படங்கள் அதை வெளிக் கொண்டு வந்துள்ளன.

அதில் ஐ லவ் யூ கய்ஸ் என்று கூறியுள்ள, நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, நாம் இந்த ஊரடங்கிற்கு பிறகு ஒரு வாரம் சுற்றுலா செல்ல வேண்டும். நாம் மட்டும்தான் நண்பர்களே, நாம் இழந்தவைகள் குறித்து பேசலாம், என்னை நம்புங்கள் நாம் ஒன்றாக இருப்பதை விட விலைமிக்கக்கூடியது ஒன்றும் இல்லை.

நாளைக்கு நமக்கு என்ன ஆகும் என்று தெரியாது என்று பதிவிட்டு தன்னுடைய சேட்டிங்கை முடித்துள்ளார். அவரது

இந்த சேட்டிங்கை பார்த்த நெட்டிசன்கள், கடைசி ஆசைக் கூட நிறைவேறாமல், இத்தனை இளம் வயதில் இறந்துவிட்டாரே என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்