நடிகர் சேதுராமன் மரணம் குறித்து பரவிய வதந்தி:... அவரின் நெருங்கிய நண்பர் சாடல்! கண்ணீர் பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகர் சேதுராமன் உயிரிழந்தார் என வெளியான தகவலுக்கு அவருடைய மருத்துவ நண்பர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் (36) கடந்த 26ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். நடிகராக மட்டுமன்றி, தோல் சிகிச்சை மருத்துவராகவும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இளம் வயதில் இவரது திடீர் மறைவு பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சூழலில் சேதுராமன் கொரோனா வைரஸ் பாதிப்பால் தான் காலமாகிவிட்டார் என்று சிலர் தகவல்களைப் பரப்பினார்கள்.

இது தொடர்பாக சேதுராமனின் நெருங்கிய மருத்துவ நண்பரான அஸ்வின் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பதில், நீ இல்லாமல் என் வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை சேது. இது என் வாழ்வின் மிக வலி மிகுந்த நாள்.

30 ஆண்டுக்கால நட்பு, சகோதரத்துவம், உலகத்தையும் இளைஞர்களையும் நாம் பார்த்த பார்வை, இந்த உலகத்துக்கு நாம் நல்லதையும், மகிழ்சியையும் மட்டுமே கொடுக்க முடிவு செய்தோம்.

மக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். அவர் மாரடைப்பால் இறந்துள்ளார், கொரோனாவால் அல்ல. தயவுசெய்து இந்த நேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கும் சேதுராமனுக்கும் உள்ள நட்பு குறித்து அஸ்வின் விஜய் இதுதான் நாங்கள் எடுத்த கடைசி போட்டோ. இன்னும் நிறைய எடுத்திருக்க வேண்டும். என்னுடைய பிறந்தநாளை நான் மீடியாவிடம் சொன்னது இல்லை. ஆனால் நீ விட்டுச்சென்ற இந்த மார்ச் 26 வலி மிகுந்த நாளாக மாறிவிட்டது.

என்னுடைய பிறந்தநாள் அன்று உன்னுடையதுதான் முதல் அழைப்பு, அதில் 'மச்சான், இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் நான் உனக்காக பிரெட் மட்டும்தான் வாங்குகிறேன்' என்று நகைச்சுவையாகக் கூறினாய். அது தான் உன்னுடைய கடைசி அழைப்பு என்று நான் உணரவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்