பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான தபாஸ் பால் மாரடைப்பால் காலமானார்.

பெங்காலி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் தபாஸ் பால்.

அரசியலிலும் ஈடுபாடு கொண்ட இவர் திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தபாஸ்கு மனைவியும் மகளும் உள்ள நிலையில் மும்பையில் உள்ள மகளை பார்க்க கொல்கத்தாவுக்கு சென்றார்.

மீண்டும் மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது திடீரென தபாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

கடந்த இரண்டாண்டுகளாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தபாஸ் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்திருக்கிறார்.

தபாஸின் மறைவுக்கு திரையுலகினரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்