நடிகரும் இயக்குநருமான ராஜ் கபூரின் மகன் மெக்காவில் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
2117Shares

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் ஷாருக் கபூர் மெக்காவுக்கு சென்றிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ராஜ் கபூர். தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் அறிமுகமான இவர், சின்ன ஜமீன், வள்ளல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.

நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்கம் மட்டுமன்றி குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து பெயரெடுத்தவர் ராஜ் கபூர்.

ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது தாயாருடன் சவுதி அரேபியாவின் மெக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு காலநிலை ஒத்துக்கொள்ளாமல் போக, மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

இதனிடையே ஷாருக் கபூரின் உடலை மெக்காவிலேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

ஷாருக் கபூரை சினிமாவில் அறிமுகம் செய்வதற்கான வேலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், 23 வயதிலேயே அவர் மரணமடைந்திருப்பது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்