நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் ஆதார வீடியோ பார்க்க அனுமதி! ஆனால் பிரபல நடிகருக்கு விதித்த நிபந்தனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய ஆதாரமாக கூறப்படும் மெமரி கார்ட்டில் இருக்கும் வீடியோவை நடிகர் திலீப்பிற்கு வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ் சினிமா மட்டுமின்றி பிற மொழிகளிலும் கொடி கட்டி பறந்த நடிகை ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார்.

இதனால் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாருக்கு பின் குறித்த நடிகையின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பாடாமல் உள்ளது. ஆனால் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், சதித்திட்டம் தீட்டியவர் நடிகர் தீலிப் தான் என்று கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2 மாதங்கள் கழித்து ஜாமினில் வெளியில் வந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில், நடிகை கடத்தித் தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் மெமரி கார்டு மிகமுக்கியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

இதனால் அதன் நகலை தனக்கு வழங்க வேண்டும், நான் அதை பார்க்க வேண்டும், நான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க குறித்த மெமரி கார்டில் இருக்கும் ஆதாரங்களை அணுக அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மெமரி கார்டில் உள்ளவற்றை நடிகர் திலீப் பார்க்க அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அதன் நகலை தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

ஏனெனில் இது குறித்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை திலீப்புக்கு வழங்கினால் அது நடிகையின் புகழுக்கும், தனி மனித உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நடிகையின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்பட்டிருந்ததால், நடிகர் திலீப் அல்லது அவரது வழக்கறிஞர் மெமரி கார்டில் இருப்பதை நிபந்தனைகளுடன் பார்க்கலாம்.

ஆனால், திலீப்பிடம் அதைக் கொடுக்க அனுமதிக்க முடியாது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்