பிரபல மூத்த திரைப்பட நடிகை மாரடைப்பால் மரணம்! கணவர் கல்லறைக்கு அருகில் புதைக்கப்படும் உடல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகை ஷவ்கத் கைபி (91) மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் கணவரின் கல்லறைக்கு அருகிலேயே அவர் சடலமும் புதைக்கப்படவுள்ளது.

தென் இந்தியாவின் ஹைதரபாத் நகரில் பிறந்த பைபி பின்னாளில் ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோயால் பாதிக்கபட்டிருந்த கைபி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

நேற்று மாலை மும்பை வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கைபியின் சடலம் இன்று உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் கணவரின் கல்லறைக்கு அருகிலேயே புதைக்கப்படவுள்ளது.

உயிரிழந்த கைபிக்கு ஷபானா என்ற மகளும் பாபா என்ற மகனும் உள்ளனர்.

இதில் ஷபானா பிரபல நடிகையாகவும், பாபா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.

கைபி மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்