நான் அப்படி பேசுவேனா? அம்மா,அப்பா, மகன் எல்லாரும் போய்ட்டாங்க! வேதனையில் பேசிய நடிகர் விவேக்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான விவேக் தான் சிவாஜியைப் பற்றி கூறிய கருத்து வேறு மாதிரி திரிக்கப்பட்டது மிகுந்த வேதனையளித்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் விவேக். இவருடைய காமெடி சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும் என்பதால், இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

திரைத்துறையை தவிர சமூக அக்கறை கொண்ட விவேக், மரம் நடுவது எவ்வளவு முக்கிய என்பதை கூறி, இதுவரை லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

இப்படி சமூக அக்கறை கொண்ட விவேக், நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக கூறி சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக சில விஷயங்கள் கூறப்பட்டன.

இது குறித்து விவேக் கூறுகையில், சிவாஜி சாரை நாம் அப்படி ரசித்திருக்கிறோம், எத்தனை இடங்களில் அவரைப் பற்றி உயர்வாக பேசியிருக்கிறோம்.

மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் மனிதனை நான் எப்படி கிண்டலாகவும், தாழ்த்தியும் பேசுவேனா? நான் இந்த மண்ணில் பிறந்தவன், அவரை கொண்டாடுபவர்களில் நானும் ஒருவன் அப்படி சொல்வேனா? இப்படி சிலர் சொல்வதால், சமுதாயத்தில் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு நபரை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள்.

சிவாஜியைப் பற்றி நான் பல இடங்களில் உயர்த்தி பேசியிருக்கிறேன், என்னை யாராவது பாராட்டி போஸ்டரை ஒட்டியிருக்கிறீர்களா? எவ்வளவு பள்ளிக்கு சென்று மரம் நட்டியிருக்கிறேன் அதைப் பற்றி எல்லாம் பாராட்டியிருக்கீற்களா? 10 வருடமாக கலாம் சார் சொல்லிவிட்டார் என்று மரம் நட்டு வருகிறேன்.

Twitter/Vivek

இதனால் நான் எவ்வளவு இழப்புகளை சந்தித்துள்ளேன்? என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வளவு இழப்புகளை சந்தித்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் தாண்டி சிரிக்க வைப்பவன்(எனக்கு) இவ்வளவு கஷ்டங்கள் வரவே கூடாது? நான் என்ன தவறு செய்தேன்?எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை, என் மகனும் போய்ட்டான், என் வாழ்க்கையில் குருவாக இருந்த கலாம் சார் போய்விட்டார், சினிமா வாழ்க்கை கொடுத்த பால்சந்தர் சார் போய்விட்டார் எனக்கு இப்போது யார் இருக்கா? ரசிகர்களை தவிர யாரும் இல்லை,

அவர்களிடம் என்னைப் பற்றி தவறாக கூறி, சில பேரை வருத்தப்பட வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அப்படி எதுவும் நான் எதாவது தவறாக கூறியிருந்தால், என்னை தொடர்பு கொண்டு கூறலாம், அதை விடுத்து இப்படி சமூகவலைத்தளங்களில் பரப்புவது மிகுந்த வேதனை, கஷ்டமாக இருக்கு என்று வருத்தப்பட்டுள்ளார்.

sunTv

நடிக விஜய்யின் பிகில் பட இசை வெளியிட்டு விழாவின் போது, என் நெஞ்சில் கூடியிருக்கும் ரசிகர்களே என்று கூறினார். அதற்கு அரங்கத்தில் கை தட்டல் பறந்தது. அதன் பின் விவேக் 1960-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த இரும்புத் திரை படத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற காதல் பாடல் ஒன்று இருக்கும், அந்த பாடல் அப்போது ஒரு காதல் உணர்வை கொடுத்தது, இப்போது விஜயின் இந்த நெஞ்சில் கூடியிருக்கும் வார்த்தை வேறு ஒரு உணர்வை கொடுக்கிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்