தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியரான பிரபல ஹாலிவுட் ஹீரோ!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்திவ் மெக்கானேகே, தான் படித்த டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகியுள்ளார்.

A Time to Kill, Contact, U-571, Interstellar உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மேத்திவ் மெக்கானேகே. கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான Dazed and Confused படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏராளமான வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

49 வயதாகும் மேத்திவ், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இந்நிலையில், தான் படித்த அதே பல்கலைக்கழகத்தில் மேத்திவ் பேராசிரியராகியுள்ளார்.

அவர் Radio-Television-Film துறைக்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘நான் திரைப்பட கல்லூரியில் படித்தபோது விரும்பிய வகுப்பு இது. இந்த மாணவர்களுடன் வகுப்பறையில் பணியாற்றுவது, அவர்களை தயார்படுத்தும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது.

காகிதத்தில் உள்ள வார்த்தைகளை திரைப்படமாக மாற்றுவது என்பது ஒரு கலை, விஞ்ஞானம். அதை மாணவர்களுக்கு கற்றுத்தரப்போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Richard Shotwell/Invision/AP

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers