பிரபல இளம் நடிகை நள்ளிரவில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல இந்தி நடிகை பேர்ல் பஞ்சாபி மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் பேர்ல் பஞ்சாபி (20) வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வந்தார். ஓஷிவாராவில் லோகண்ட்வாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பேர்ல் தாயாருடன் வசித்து வந்தார்.

இவருக்கு நீண்ட நாட்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த பேர்ல் தொடர்ந்து தனது தாயாருடன் சண்டையிட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பேர்ல் மீண்டும் தாயுடன் சண்டையிட்ட நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் மொட்டை மாடியில் இருந்து குதித்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் பேர்ல் ஏற்கனவே இதற்கு முன்னர் 2 முறை தற்கொலைக்கு முயன்றார் என தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்