சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரபல நடிகர் கைது

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

போட்டோ ஷூட் நடத்துவதாக கூறி சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரபல நடிகர் மந்தர் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

மராத்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றை இயக்கியதோடு நடிகராகவும் வலம் வருபவர் மந்தர் குல்கர்னி.

இவர் கடந்த 16ஆம் திகதி தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக விதவிதமான ஆடைகளை சிறுமியிடம் கொடுத்து அணிய சொல்லிய மந்தர் போட்டோ எடுத்தார்.

பின்னர் பிகினி உடையை கொடுத்து அணிய கூறிய போது சிறுமி அணிய மறுத்தார்.

ஆனால் வேறு பெண்கள் அந்த உடையுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டிய மந்தர் கட்டாயப்படுத்தி பிகினி உடையை சிறுமியை உடுத்த வைத்தார்.

இதன்பின்னர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் மந்தர் ஈடுபட்டார். பிறகு வீட்டுக்கு சென்ற சிறுமி சமீபத்தில் தனக்கு நடந்த கொடுமையை தாயிடம் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பொலிசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து மந்தர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்