நரகத்தில் இருந்த நடிகை விஜயலட்சுமி.. 24 மணிநேரத்தில் ரஜினி செய்த செயல்: அப்படி என்ன செய்தார்?

Report Print Basu in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரண்டஸ் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் நடிததின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தனது நெருக்கடியான சூழ்நிலையைப் பற்றிப் பேசினார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உதவியை கோரினார்.

இந்நிலையில், குறித்த வீடியோ ரஜினியின் கவனத்திற்கு செல்ல, அவர் 24 மணி நேரத்திற்குள் விஜயலட்சுமியின் பிரச்சினைக்கு தீர்வளித்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில், வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.

அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.

ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers