அழிவை நோக்கி செல்லும் ஒருவரின் தலைமையில் இந்தியா.. மோடியை விமர்சித்த தமிழ் நடிகர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நடிகை அமலா பால் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒருசேர விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிகை அமலா பால் ஆதரவான கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘மத்திய அரசின் இந்த முடிவு, உண்மையிலேயே ஆரோக்கியமான ஒன்று. இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை எடுப்பதற்கு மோடியால் மட்டுமே முடியும். நாடு சமாதானம் பெற வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இந்த நாடானது அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒருவரின் தலைமையைக் கொண்டுள்ளது. இதெல்லாம் திசை திருப்பும் வேலை. இதை எல்லாம் தெரிந்துகொண்டே தான் செய்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்