விசா இல்லாமல் இலங்கைக்கே போகலாம், ஆனா இங்க போக முடியாதா? பிரபல தமிழ் நடிகை ஆவேசப்பட காரணம் என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

விசா இல்லாமல் பக்கத்து நாடான இலங்கைக்கு போக முடிகிறது எனவும் ஆனால் அனுமதி இல்லாமல் காஷ்மீருக்கு போக முடியாது என நடிகை கஸ்தூரி ஆவேசமாக பேசியுள்ளார்.

காஷ்மீரில் மண்ணின் மைந்தர்கள் தவிர அந்நியர்களுக்கு அனுமதியில்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது 370 சட்டப்பிரிவை நீக்கப்பட்டதால் காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கப்பட்டதால் இந்திய சட்டம் காஷ்மீருக்கும் செல்லும்.

இந்நிலையில் எல்லா விடயங்களுக்கும் கருத்து சொல்லும் நடிகை கஸ்தூரி இது குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், இங்கிருந்து பக்கத்து நாடான இலங்கைக்கு போக வேண்டும் என்றால் கூட விசாவே தேவையில்லை.

அதுவே நம்ம நாட்டுக்குள் உள்ள ஒரு மாநிலத்துக்குள் போக அனுமதி வாங்கணுமாம்.

இது மிகவும் அநியாயம் ஆகும், ஆனல் இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலேயே ஒரே இந்தியாவாக மாறிவிட்டது.

காஷ்மீரில் இருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்துகள் வாங்கலாம். ஆனால் அங்கிருந்து ஒரு செங்கல் கூட வெளில யாரும் கொண் வர முடியாதாம்.

இது புதிய சட்டத்தின் மூலம் மாறியுள்ளது, காஷ்மீருக்கு தனியாக கொடுக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்