என் மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டேன்... நடிகை ஸ்ரீதேவியின் கணவர் உருக்கம்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

என் மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டேன் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரைப்பட துறையில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் நடிகர் அஜித் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அந்த சமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தமிழ் படத்தை தயாரித்து அதில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க வேண்டும் என ஸ்ரீதேவி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்துவிட்டார்.

அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ‘பிங்க்’ என்கிற இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து, அதில் நடிகர் அஜித்தை நடிக்க வைத்தார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் சிறப்புக்காட்சி இன்று சிங்கப்பூரில் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் பதிவிட்டுள்ள போனி கபூர், 'என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை பூர்த்தி செய்துள்ளேன். அஜித், வினோத் மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. இதை நான் எப்போதும் போற்றுவேன்' என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers