தேசிய துப்பாக்கிசூடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற நடிகர் அஜித்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

கோவையில் நடைபெற்ற துப்பாக்கிசூடுதல் போட்டியில் நடிகர் அஜித் வெற்றி பெற்றதை அடுத்து, மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

திரைப்படத்துறை மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்படக் கலை மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி அதிலும் சாதித்து வருபவர் நடிகர் அஜித்.

கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய வழிகாட்டுதலின்படி 'தக்‌ஷா' அணியின் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக பறந்து உலகளவில் 2ம் இடம் பிடித்தது.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக கலந்து கொண்ட நடிகர் அஜித், 5 சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்