உன் துணிச்சலை தலைவணங்குகிறேன்... சூர்யா பிறந்தநாளில் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஆளும் அரசினால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் நடிகர் சூர்யாவிற்கு, சத்யராஜ் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி செலவை கவனித்து வரும் நடிகர் சூர்யா, சமீபத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்தானது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த சிலர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள நடிகர் சத்யராஜ், புதிய கல்விக்கொள்கை குறித்த அவருடைய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், நமக்கு ஏன் வம்பு என்று இருக்காமல், சமூக நீதிக்காக நீ குரல் கொடுத்திருப்பதால், நான் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்.

சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகனாக இருந்துகொண்டு கருத்துக்கூறினால், சில கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் பல சங்கடங்கள், எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். அதனை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அதனையும் நுனிப்புல் மேய்ந்தது போல் சொல்லாமல், ஆழமாக இறங்கி அலசி ஆராய்ந்து கூற வேண்டிய கருத்தை பதிவு செய்திருக்கிறாய்.

அதனால் உன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகிறேன். உன் துணிச்சலை வணங்குகிறேன் என பேசியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்