முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாகிறது! அவர் வேடத்தில் நடிக்க போகும் தமிழ் ஹீரோ யார் தெரியுமா?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரன் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகவும், அதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

அவர் கடந்த 1972ஆம் ஆண்டு கண்டியில் பிறந்தார், மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் முரளிதரன்.

டெஸ்டில் 800 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 534 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு ’800’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பவுள்ளதாக இந்தியா டுடோ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை எடுக்க போகும் குழுவுக்கு நெருக்கமானவர்கள் இது குறித்த பேட்டியை கொடுத்துள்ளனர்.

அதன்படி இந்த படத்தில் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா, இலங்கை, பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையில் இதுதொடர்பாக விஜய் சேதுபதியின் மேலாளர் கூறுகையில், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது உண்மைதான். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக 10 நாள்கள் ஆகலாம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்