வெளிநாட்டு பெண்மணியை வைத்து: இந்திய ரசிகர்களை மோசமாக கிண்டல் செய்த அஜித் பட வில்லன்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள், எப்படியாவது கோப்பையை தட்டிவிடலாம் என்று கண்டிருந்த கனவு தவிடுபொடியாகிவிட்டது.

அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி போராடி தோற்றது. டோனியின் கண்கள் கலங்கியது முதல் இந்திய வீரர்களின் வருத்தம் மற்றும் இந்திய ரசிர்களின் ஏமாற்றம் என அனைத்தும் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி கொண்டிருந்தது.

தோல்வியில் இருந்து மீளாத இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக பாலிவுட் நடிகரும், அஜித் நடித்த விவேகம் படத்தின் வில்லனுமான விவேக் ஒபராய் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் இந்தியர் ஒருவரை கட்டிப்பிடிக்க வருகிறார். தன்னைத்தான் கட்டிப்பிடிக்க வருகிறார் என எண்ணிய இந்தியரும், வெள்ளைக்கார பெண்மணியை கட்டிப்பிடிக்க, அவர் பின்னால் இருந்த வெளிநாட்டு ஆண் அந்த பெண்மணியை கட்டிப்பிடிக்கிறார்.

நாம் ஏமாற்றுப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த இந்தியர் அங்கிருந்து செல்கிறார். இந்த ஏமாற்று வீடியோவை பயன்படுத்தி இந்திய ரசிகர்களை கிண்டல் செய்துள்ளார் விவேக் ஒபராய்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்