பல்வேறு எதிர்ப்புகளை மீறி ஆப்பிரிக்கருடன் நடைபெற்ற பாடகி சுதா ரகுநாதன் மகள் திருமணம்.. வைரல் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் பல்வேறு எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுதா ரகுநாதன் மகள் மாளவிகாவுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான முனைவர் மைக்கேல் மர்ஃபி மீது காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.

இத்திருமணத்துக்கு சுதா ரகுநாதனின் சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து அறிந்த நெட்டிசன்களும் சுதா ரகுநாதனின் மகள் மதம் மாறிவிட்டார், அதனால் அவரின் அம்மாவை இனி சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் எல்லா எதிர்ப்பையும் மீறி இன்று சென்னையில் மாளவிகா - மைக்கேல் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மாப்பிள்ளை மர்ஃபி வைணவ முறைப்படி உடை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...