பும்ராவுடன் டேட்டிங்..! இது தான் உண்மை... ஓபனாக கூறிய நடிகை அனுபமா

Report Print Basu in பொழுதுபோக்கு

இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் டேட்டிங் என பரவி செய்தி தொடர்பாக நடிகை அனுபமா பரமேஸ்வரம் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவும், பிரேமம் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாகவும், இருவரும் டேட்டிங் செய்வதாக செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அனுபமா, இது ஒரு வதந்தி. நானும், பும்ராவும் நல்ல நண்பர்கள். நான் பும்ராவுடன் டேட்டிங் செய்யவில்லை. இது போன்று இருவரை தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்புவது வழக்கம் தான் என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, பும்ராவுடன், தெலுங்கு நடிகை ராஷி கண்ணாவை தொடர்பு படுத்தி வதந்திகள் பரவியது. இதற்கு பதிலளித்த ராஷி கண்ணா, எனக்கு தனிப்பட்ட முறையில் பும்ராவை தெரியாது, நான் அவரை சந்தித்தது கூட கிடையாது. அவரை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே எனக்கு தெரியும், அவ்வளவு தான் என கூறினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்