பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகை வனிதாவை கைது செய்ய பொலிஸ் தீவிரம்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகை வனிதா, ஆள் கடத்தல் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கடந்த 2007ம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2012ம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த தம்பதியினரின் மகள் ஜோவிதா தந்தை ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார். அவரை வனிதா பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் ஆனந்த்ராஜ், தன்னுடைய மகளை வனிதா கடத்திவிட்டதாக தெலுங்கானா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை வழக்காக பதிந்த பொலிஸார், தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் வனிதாவை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்மூலம் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள வனிதா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers